இஷான் கிஷன்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பேக்கப் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக தேர்வான இந்திய அணியின் இளம் துவக்க வீரர் இஷான் கிஷன், டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரர் ரோகித் சர்மாவிற்கு பதில் மாற்று வீரராக விளையாடுவதற்கு அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளார்.
இந்த இளம் வீரரின் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணி அடுத்தடுத்த வாய்ப்புகள் கொடுத்தால் நிச்சயம் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிர்கால இந்திய அணியின் மிக முக்கிய துவக்க வீரராக உருவெடுப்பார் என பெரும்பாலானோர் இஷான் கிஷன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.இதனால் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.