பிரித்வி ஷா.
2018ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடிய பிரித்விஷா தன்னுடைய முதல் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார் ஆனால் இவர் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்த்த நிலையில் இவருடைய ஆட்டம் மிக மோசமாக அமைந்தது இதனால் கடந்த மூன்று வருடங்களாகவே இந்திய அணியில் இருந்து இவர் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த ரஞ்சிக் கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுத்த பிரித்விஷா முச்சதம் அடித்து இந்திய கிரிக்கெட் வட்டத்தில் மீண்டும் பேசு பொருளாக திகழ்ந்து வருகிறார். இதனால் இவரை இந்திய அணியின் துவக்க வீர ரோகித் சர்மாவிற்கு பதில் மாற்று வீரராக பயன்படுத்தி பார்க்கலாம் என முன்னாள் வீரர்களால் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இவர்களை தவிர்த்து கே.எல் ராகுல், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற வீரர்களுக்கு ரோகித் சர்மாவிற்கு பதில் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கலாம் என பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது