ஷெர்பேன் ரூதர்போர்ட்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ரூதர்போர்ட் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்களான பிராவோ பொல்லார்ட் மற்றும் ரசல் போன்று மிக சிறந்த முறையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் விளையாடக் கூடிய திறமை படைத்தவர்.
2020 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்ட இவரை 2021 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஜானி பேர்ஸ்டோக்கு பதில் தேர்வு செய்தது,ஆனால் இவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு ஹைதராபாத் அணி வாய்ப்பளிக்கவில்லை. என்னதான் இவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும் இவருடைய அதிரடியான ஆட்டத்தின் காரணமாக இவரை வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு ஒவ்வொரு அணியும் ஒப்பந்தம் செய்வதற்கு முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்க படுகிறது.
