கிறிஸ் கெயில்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் மிகவும் அதிரடியாக விளையாடி யுனிவர்ஸ் பாஸ் என்ற பட்டத்தை பெற்றவர். இவருடைய அதிரடியான பேட்டிங்கின் மூலம் பலமுறை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக செயல்படும் வீரர்களில் ஒருவரான இவர் 2003ஆம் ஆண்டு நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் கிறிஸ் கெயில் தனது ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதில் துவக்க வீரராக களமிறங்கிய கெயில் இறுதிவரை தனது விக்கெட்டை இழக்காமல் சதம் அடித்து அசத்தினார். மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அந்த தொடரில் 4 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
