பவுல் கோலிங்வுட்
இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் மற்றும் அந்த அணியின் கேப்டன் கோலிங்வுட் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பலமுறை உதவியாக இருந்திருக்கிறார்.
நாட்வெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 86 பந்துகளில் 112 ரன்கள் அடித்து அசத்தினார். இவர் அந்த போட்டியில் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் 4 விக்கெட்களை எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்தார். மேலும் அந்தப் போட்டியின் மேன் ஆப் தி மேட்ச் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
