சர்வதேச கிரிக்கெட் தொடரில் டி20 போட்டிக்கான தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் 20 ஓவர்களை கொண்ட இந்த போட்டி இறுதி ஓவர் வரை மிகவும் அதிரடியாக நடைபெறும்.
இந்த போட்டியில் கடைசி 20வது ஓவரில் அதிகமான சிக்சர்களை அடித்த 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
ஆங்கிலோ மேத்யூஸ்
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் மேத்யூஸ் t20 தொடரில் இலங்கை அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர். இவர் பல முறை மிகவும் அதிரடியாக விளையாடி இலங்கை அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார்.
பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் மிகவும் அதிரடியாக விளையாடும் மேத்யூஸ், சிறந்த பினிசர்களில் ஒருவராவார். 78 டி20 போட்டிகளில் விளையாடிய இவர், கடைசி 20 ஓவரில் 11 சிக்சர்கள் அடித்து நமது பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
