டேரன் சமி
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சர்வதேச டி20 போட்டிகளில் கடைசி 20 ஆவது ஓவரில் அதிகமான சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்த இவர் பல இக்கட்டான நிலையிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார்.
குறிப்பாக டி20 தொடரில் மிக முக்கிய வீரராக திகழ்ந்து வந்த டேரன் சமி, 2012 மட்டும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வெற்றி பெறச் செய்தார். இவர் 20 ஆவது ஓவரில் 11 சிக்சர்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
