மகேந்திர சிங் தோனி
இந்திய அணியின் முன்னாள் வெற்றிகர கேப்டன் மகேந்திர சிங் தோனி அனைத்து விதமான சர்வதேசத் தொடர்புகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டார். ஆனால் தற்பொழுது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு திறம்பட அந்த அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்திய அணிக்கு தான் விளையாடிய காலங்களில் மிக சிறந்த பினிஷேர் ஆக திகழ்ந்து பல முறை இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். தோனி களத்தில் இறுதிவரை இருந்தால் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் மத்தியில் நீங்காத ஒரு நம்பிக்கை இருந்தது என்பது குறிப்பித்தக்கது. இவர் டி20 தொடரின் கடைசி ஓவரில் 12 சிக்சர்களை அடித்து நமது பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
