ஜாகீர் அப்பாஸ்
ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று சதம் அடித்து அனைவராலும் ஆச்சரியத்துடன் பார்க்க பட்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வலதுகை பேட்ஸ்மேன் ஜாகீர் அப்பாஸ், பாகிஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடி பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். லிமிடெட் ஓவர் போட்டிகளில் மிகவும் அதிரடியாக விளையாடும் ஜாகீர் அப்பாஸ் 62 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 2572 ரன்களை அடித்துள்ளார். அதில் ஏழு சதங்களும் பதிமூன்று அரை சதங்களும் அடங்கும்.
இவர் 45 போட்டிகளிலேயே 2000 ரன் கடந்து அதிவேகமாக ஒருநாள் தொடரில் இரண்டாயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
