கெவின் பீட்டர்சன்
இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் உலகளவில் மிகவும் பிரபல்யமான வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவருடைய ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் பலமுறை இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் தன் விளையாடிய காலங்களில் இங்கிலாந்து அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்த கெவின் பீட்டர்சன் 136 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 4440 ரன்களை அடித்துள்ளார் அதில் 9 சதங்களும் 25 அரை சதங்களும் அடங்கும்.
இவர் 45 போட்டிகளில் ஒருநாள் தொடரில் 2 ஆயிரம் ரன்களை அடித்து, அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
