பாபர் அசாம்
சர்வதேச ஒருநாள் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் மற்றும் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இவர் 83 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 3985 ரன்களை அடித்துள்ளார். அதில் 14 சதங்களும் 17 அரை சதங்களும் அடங்கும். 26 வயதாகும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இன்னும் பல சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
