Use your ← → (arrow) keys to browse
ஹசிம் அம்லா
சவுத் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் ஹசிம் அம்லா சவுத் ஆப்பிரிக்கா அணியில் மூன்று விதமான தொடர்களிலும் பங்கேற்று பலமுறை சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். இவர் 181 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 8113 ரன்களை அடித்துள்ளார் அதில் 27 சதங்களும் 39 அரை சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் அமைதியாக இருக்கும் ஹசிம் அம்லா பேட்டை தூக்கி கொண்டு களத்தில் இறங்கினால் எதிரணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்யக்கூடியத் வல்லவரான ஹசிம் அம்லா ஒருநாள் தொடரில் 40 போட்டிகளிலேயே 2 ஆயிரம் ரன்களை கடந்து அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Use your ← → (arrow) keys to browse