கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கௌதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை ஐபிஎல் டைட்டில் பட்டத்தை வென்று சாதனை படைத்தது, அதற்குப்பின் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக செயல்படவில்லை. இந்நிலையில் வருகிற 2022 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்போடு காத்திருப்போம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிச்சயம் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவை தங்களது அணியில் இணைப்பதற்கு முயற்சி செய்யும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் இந்திய வீரர் வருன் சக்கரவர்த்தி மிக சிறந்த முறையில் பந்துவீசி எதிரணி வீரர்களை திணற அடித்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
