டெல்லி கேப்பிடல்
கடந்த 3 ஆண்டுகளாக மிக சிறப்பாக செயல்பட்டு வரும் டெல்லி கேப்பிடல் அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் பொறுப்பேற்றபின் அந்த அணி மிகவும் அருமையாக விளையாடி வருகிறது. இருந்தபோதும் அந்த அணி கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு விஷயமாகும்.
இந்நிலையில் வருகிற 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ரிஷப் பண்ட் மற்றும் ககிசோ ரபடா ஆகிய வீரர்களை தனது அணியில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் ஹசரங்காவை தேர்ந்தெடுப்பதால் டெல்லி கேப்பிடல் அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
