பஞ்சாப் கிங்ஸ்
என்னதான் மிகச் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய அணியாக இருந்தாலும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை, மேலும் வருகிற 2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கே எல் ராகுல் மற்றும் முஹம்மது சமி ஆகிய இருவரை தவிர மற்ற எந்த ஒரு வீரரையும் தக்க வைத்துக் கொள்ளாது என்று கிரிக்கெட் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே பஞ்சாப் கிங்ஸ் அணி இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்காவை நிச்சயம் தனது அணியில் இணைப்பதற்கு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும். மேலும் ஹசரங்கா பஞ்சாப் கிங்ஸ் அணியில் தேர்வாகினால் அது அந்த அணிக்கு கூடுதல் பலமாகவே இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
