சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
2021 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி மிக சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்த்த நிலையில் டேவிட் வார்னர் தலைமையில் ஹைதராபாத் அணிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் பதவியை டேவிட் வார்னர் இடமிருந்து கேன் வில்லியம்சன் இடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் வருகிற 2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் மற்றும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆகிய இருவரையும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவை ஹைதராபாத் அணி தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அந்த அணி பந்துவீச்சில் மிகப் பலம் வாய்ந்த அணியாக மாறும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
