2,ஜாகஸ் காலிஸ் ஆல்ரவுண்டர் ரெக்கார்ட்.
சவுத் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் காலிஸ் ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வந்தவர். 1995 முதல் 2014 வரை மொத்தம் 17 வருடங்கள் சர்வதேச போட்டியில் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்து வந்தார் இவர் 166 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 328 ஒருநாள் போட்டி தொடர் மற்றும் 25 டி20 தொடரில் விளையாடி உள்ளார்.
உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்த காலிஸ் மூன்று விதமான தொடர்களிலும் சேர்த்து 577 விக்கெட்களை வீழ்த்தி 25534 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இவருடைய இந்த ஒரு சாதனையை இதுவரை எந்த ஒரு வீரரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
