4,யுவராஜ் சிங் அதிவேக அரைசதம்
இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆக வலம் வந்த யுவராஜ் சிங் 2007 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றுவதற்கு மிகவும் ஒரு முக்கிய வீரராக திகழ்ந்தார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் போட்டியில் 6 பந்துகள் 6 சிக்ஸர்கள் அடித்து முதன்முதலில் அந்த சாதனையை படைத்தார்.
மேலும் அதே போட்டியில் 12 பந்துகளில் அரைசதம் அடித்து மிகப்பெரும் சாதனை படைத்தார். இந்நிலையில் இன்றளவும் அந்த ஒரு சாதனை படைப்பதற்கு அனைத்து வீரர்களும் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தையா முரளிதரன் 1357 விக்கெட்
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் சர்வதேச போட்டிகளில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து பல சாதனைகளை படைத்துள்ளார்.பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருநாள் போட்டித் தொடர்களில் 537 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் மொத்தம் 1357 விக்கெட்களை வீழ்த்தி இன்றளவும் எந்த ஒரு வீரரும் செய்ய முடியாத சாதனையை படைத்துள்ளார் இவருக்கு பின் 901 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேம்ஸ் அன்டர்சன் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
