2,ஷேன் வார்னே வின் கெட்ட கனவு
பேட்ஸ்மேன்களின் சிம்மசொப்பனமாக திகழ்ந்த ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 708 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் .டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஷேன் வார்னே தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு பலமுறை வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் அந்த காலகட்டத்தில் திகழ்ந்த முன்னணி பேட்ஸ்மேன்களில் விக்கெட்களை வீழ்த்தி மிக சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.
இருந்தபோதும் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே பந்தை மிகவும் எளிதாக கையாள்வதில் கெட்டிக்காரராக திகழ்ந்தார். இருந்தபோதும் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டுகளை விசாரணை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அப்பொழுது நடைபெற்ற பத்திரிக்கையாளர்களின் பேட்டியின்போது சச்சின் டெண்டுல்கர் குறித்து கெட்ட கனவுகள் காண்பதாக ஷேன் வார்னே தெரிவித்திருந்தார். ஆனால் அதை அப்பொழுது இருந்த ஊடகங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு அதனை மக்களிடத்தில் தவறாக பரப்பியது என்று ஷேன் வார்னே தனது ஓய்வுக்குப்பின் கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
