2008ஆம் ஆண்டு முதல் முறை ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. அந்த ஆண்டு ஷேன் வார்னே தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிக சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. முதலாண்டு அவ்வளவு அபாரமாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஆனால் அதற்கு பின்னர் அப்படி விளையாட முடியவில்லை.
2008-ம் ஆண்டுக்குப் பின்னர் 2013ம் ஆண்டு மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. வேறு எந்த ஆண்டிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அணி லீக் போட்டிகளில் 7-வது மற்றும் 8வது இடத்தில் தனது தொடரை முடித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ்,ஜோஸ் பட்லர், கிறிஸ் மோரிஸ், டேவிட் மில்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உணத்கட், மற்றும் ராகுல் தெவாட்டியா போன்ற முக்கிய வீரர்கள் தற்பொழுது உள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அந்த அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் ஐந்து முறை சிறந்த வீரர்களை தேர்ந்தெடுக்க தவறியுள்ளது. அப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஐந்து மோசமான தேர்ந்தெடுப்பை பற்றி தற்போது இந்த கட்டுரையில் பார்ப்போம்.
ராபின் உத்தப்பா 2020
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2020 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் 3 கோடி ரூபாய்க்கு ராபின் உத்தப்பாவை விலைக்கு வாங்கியது. அந்த ஆண்டு ராபின் உத்தப்பா 12 போட்டிகளில் விளையாடினார். 12 போட்டிகளில் விளையாடி வெறும் 196 ரன்கள் மட்டுமே ராபின் உத்தப்பா குவித்தார்.

12 போட்டிகளில் விளையாடிய ராபின் உத்தப்பாவின் அவரேஜ் வெறும் 16.33 மட்டுமே. மேலும் 12 போட்டிகளில் இவர் ஒருமுறை கூட அரைசதம் குவிக்கவில்லை. மேலும் இந்த 12 போட்டிகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 119 மட்டுமே. இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னராக ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேடிங் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைமாற்றியது குறிப்பிடத்தக்கது.