ஒஷனே தாமஸ் – 2019
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவரை விலைக்கு வாங்கியது.
2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக நான்கு போட்டிகளில் விளையாடி இவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவருடைய பவுலிங் எக்கானமி 7.90 ஆக இருந்தது. இந்தத் தொடரில் அவருக்கு முழுவதுமாக 4 ஓவர்களை வீசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

மேலும் இந்த நான்கு போட்டிகளில் அவர் மொத்தமாகவே வெறும் பத்து ஓவர்கள் மட்டுமே வீசினார். அதற்குப் பின்னர் பத்து போட்டிகளில் இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஒரு போட்டியில் கூட விளையாட வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது