தவல் குல்கர்னி 2018
2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 75 லட்ச ரூபாய்க்கு தவல் குல்கர்னியை ஏலத்தில் எடுத்தது. அப்பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஆர் டி எம் கார்டை பயன்படுத்தி மீண்டும் தவல் குல்கர்னியை தனது அணியில் இணைத்துக் கொண்டது.

2018 ஆம் ஆண்டு மொத்தமாக இவர் 8 போட்டிகளில் விளையாடினார். அந்த 8 போட்டிகளில் இவரால் 4 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. மேலும் இந்த 8 போட்டிகளில் விளையாடி அவரது பவுலிங் எக்கானமி 9.47 ஆக இருந்தது. சரியாக பந்துவீசாத காரணத்தினால் அதற்குப் பின்னர் நடந்த 7 போட்டிகளில் இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் விளையாட வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.