உலகளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரும் ஒன்று, இந்த தொடரில் உலகின் மிகவும் பிரபலமான வீரர்கள் பலரும் பங்கெடுத்து விளையாடி வருகின்றனர். மேலும் பல இளைஞர்களின் கணவர்களும் இந்த ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் பல வீரர்கள் பல சாதனைகளை படைத்தாலும் இளம் வயதில் சில வீரர்கள் தங்களுக்கு என ஒரு தனி அடையாளத்தை பதித்துள்ளனர். இதில் நாம் இளம் வயதில் ஐபிஎல் தொடரில் சதமடித்த 5 வீரர்கள் பற்றி பார்ப்போம்.
குயின்டன் டி காக்
சவுத் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். டெல்லி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போன்ற அணிகளில் விளையாடிய குயின்டன் டி காக் ஐபிஎல் தொடரின் அசைக்கமுடியாத வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
2016 தொடரில் இவருக்கு 23 வயது இருக்கும்பொழுது டெல்லி அணிக்கு விளையாடினார். அப்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி இடையிலான போட்டியில் இவர் 58 பந்துகளில் 103 ரன்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.அந்த போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.