சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் இந்திய அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார் அப்பொழுது இவருக்கு 22 வயதுதான்.
அப்பொழுது ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 102 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். அதில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும் மேலும் இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் 205 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இளம் வயதில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இவர் 4-வது இடத்தில் உள்ளார்.