தேவதாத் படிகள்
வளர்ந்து வரும் வீரர்கள் முக்கிய வீரராக கருதப்படும் இந்திய அணியின் இளம் வீரர் படிகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரராக பலமுறை அந்த அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்திருக்கிறார். இவர் சமீபமாக நடைபெற்று முடிந்த 2021 ஐபிஎல் தொடர் முதல்பாதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார்.
வெறும் 22 வயதே ஆகும் படிகள் 52 பந்துகளுக்கு 101 ரன்களை அடித்து அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது.அதில் 6 சிக்சர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும்.மேலும் ஐபிஎல் தொடரில் இளம் வயதில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.