ரிஷப் பண்ட்
சமகால கிரிக்கெட் தொடரில் மிகவும் அச்சுறுத்தலான பேட்ஸ்மேனாக கருதப்படும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். தற்பொழுது டெல்லி அணியின் கேப்டனாக திகழ்ந்து வரும் ரிஷப் பண்ட் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார் அப்பொழுது இவருடைய வயது வெறும் இருபது தான்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து 63 பந்துகளில் 128 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். அதில் ஏழு சிக்ஸர்களும் 15 பவுண்டரிகளும் அடங்கும்.இருந்தாலும் அந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.