யூசப் பதான் – 44 முறை
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் ஐபிஎல் தொடரில் இதுவரை 154 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கிறார். மொத்தமாக 3204 ரன்களை இவர் குவித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 29.12. யூசப் பதான் இதுவரை ஒரு சதம் மற்றும் 13 ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், அதேபோல 2018 மட்டும் 2019 ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக யூசப் பதான் இதுவரை விளையாடி இருக்கிறார். மொத்தமாக 154 இன்னிங்ஸ்களில் இவர் 44 முறை இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.