கீரன் பொல்லார்ட் – 50 முறை
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆபத்பாந்தவனாக விளையாடி வரும் ஒரு கிரிக்கெட் வீரர். இவரது பெயரைக் கேட்டவுடன் அனைவரும் இவருடைய இமாலய சிக்சர்களை தான் முதலில் நினைப்பார்கள். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரை 154 இன்னிங்ஸ்களில் விளையாடி 3191 ரன்கள் குவித்திருக்கிறார். இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 30.68 ஆகும். மொத்தமாக 16 அரைசதங்கள் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இறுதி ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிக அதிரடியாக இவர் விளையாடுவார். அப்படி அதிரடியாக விளையாடியும் மொத்தமாக 154 எண்ணிக்கைகளில் 50 முறை இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.