Use your ← → (arrow) keys to browse
மகேந்திர சிங் தோனி – 70 முறை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் ஒரு ஜாம்பவான் கிரிக்கெட் வீரர். இவருக்கு மிகப் பெரிய அறிமுகம் தேவையில்லை. மொத்தமாக ஐபிஎல் தொடரில் 186 இன்னிங்ஸ்களில் விளையாடி 4669 ரன்கள் குவித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 40.25.

ஐபிஎல் தொடரில் இதுவரை இவர் 23 முறை அரை சதங்கள் குவித்திருக்கிறார். குறிப்பாக சென்னை அணிக்கு இறுதி வரை நின்று போட்டியை எடுத்துச் செல்லும் வீரராக இவர் நிறைய முறை விளையாடி இருக்கிறார். அப்படி நிறைய முறை இறுதிவரை நின்று சென்னை அணியை வெற்றிப்பாதைக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் காரணமாகவே மகேந்திர சிங் தோனி 70 முறை இறுதி வரை அவுட் ஆகாமல் இறுதிவரை நின்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Use your ← → (arrow) keys to browse