ஷிகார் தவான் – டெஸ்ட் போட்டிகள்
தவான் தற்பொழுது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் ஆனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நீண்ட நாட்களாகிவிட்டது. தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2013ம் ஆண்டு மிக சிறப்பாக விளையாடினார். அந்த போட்டியில் அவர் குவித்த ரன்கள் 187 ஆகும்.34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2315 ரன்களை குவித்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அவருடைய பேட்டிங் அவரேஜ் 40.61, மேலும் டெஸ்ட் போட்டியில் 7 சதங்கள் குவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரவிச்சந்திரன் அஸ்வின் போலவே அவரது இடத்தை நிரப்ப இளம் வீரர்களான மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் வந்து விட்ட நிலையில் இனி இவருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது. எனவே இவரும் கூடியவிரைவில் டெஸ்ட் போட்டிகளுக்கான தன்னுடைய ஓய்வு அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.