புஜாரா – ஒருநாள் போட்டிகள்
2010ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக மிக சிறப்பாக விளையாடி வரக்கூடிய ஒரு வீரர். ராகுல் டிராவிட் இடத்தை இவர் நிரப்பியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு இந்திய மண்ணிலும் சரி வெளிநாட்டு மண்ணிலும் சரி மிக சிறப்பாக விளையாடி வருகிறார்.

புஜாரா 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மொத்தமாக ஐந்து ஒருநாள் போட்டிகள் விளையாடினார் அந்த போட்டிகளில் மொத்தமாக இவரால் 51 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. ஐந்து போட்டிகளுக்கான இவருடைய பேட்டிங் அவரேஜ் 10.2 மட்டுமே. ஒருநாள் போட்டிகளில் மிக சிறப்பாக இவரால் விளையாட முடியாத காரணத்தினால் அதன் பின்னர் இவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக வழங்கப் படவில்லை. இனியும் இந்திய அணியில் இவருக்கான வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்தால் நிச்சயமாக கிடைக்காது என்பதுதான் உண்மை.
எனவே இவரும் கூடியவிரைவில் ஒருநாள் போட்டிகளுக்கான தன்னுடைய ஓய்வு அறிக்கையை வெளியிடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.