அஜிங்கிய ரஹானே – ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்
ரஹானே தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து இந்தியாவை மிக சிறப்பாக வழிநடத்தி தொடரை கைப்பற்றி தன்னுடைய திறமையை கடந்த ஆண்டு இறுதியில் நமக்கு காண்பித்தார்.
டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் அவ்வளவு சிறப்பாக விளையாட முடியவில்லை. அதற்கு காரணம் இவரது மெதுவான ஆட்டம். 2018 ஆம் ஆண்டு நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் கடைசியாக விளையாடினார்.

அந்த தொடரில் இவர் சிறப்பாக விளையாடி இருந்தாலும், அந்தப் போட்டியில் இவரது பேட்டிங் அவரேஜ் 35.26 என்று இருக்க ஆனால் இவரது ஸ்ட்ரைக் ரேட் 78.63 ஆக இருந்தது. இவரது மெதுவான ஆட்டம் இந்திய அணிக்கு சரிவர இருக்காது என்கிற அடிப்படையில் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதே நிலைமைதான் டி20 போட்டிகளிலும். இவரது இடத்தை ஏற்கனவே அதிரடியான வீரர்கள் இந்திய அணியில் நிரப்பி விட்ட நிலையில் இவருக்கு இனி இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்பதுதான் உண்மை. எனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான டைய ஓய்வு அறிக்கையை கூடிய விரைவில் இவர் அறிவிப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம்