இஷாந்த் ஷர்மா
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளராக மிக சிறப்பாக அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டியில் தவிர்க்க முடியாத ஒரு வேகப்பந்து வீச்சாளராக தன்னுடைய பெயரை தடம்பதித்த இவரால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அந்த அளவுக்கு சிறப்பாக தன்னுடைய திறமையை நிரூபிக்க முடியவில்லை.

மொத்தமாக 80 ஒரு நாள் போட்டிகளிலும் அதேபோல 14 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இருப்பினும் இவர் இறுதி ஓவர்களில் அதிகாரங்களை வழங்குவது, அதேசமயம் தொடர்ச்சியாக சிறப்பாகப் பந்துவீசி முடியாத காரணங்களால் இவருக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை படிப்படியாக அதன் பின்னர் இந்திய நிர்வாகம் வழங்கவில்லை.
தற்பொழுது இந்திய அணியில் ஏற்கனவே புவனேஸ்வர் குமார், பும்ரா, ஷமி, நடராஜன், தாகூர், சிராஜ், சைனி என அடுத்தடுத்து வீரர்கள் வரிசையாக நிற்க இவருக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் குறைவு. எனவே இவரும் கூடிய விரைவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தன்னுடைய ஓய்வு அறிக்கையை வெளியிடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.