டி20 உலகக் கோப்பை தொடரின் 15 இடங்களுக்கு போட்டியிடும் 86 அணிகள் !
வழக்கத்துக்கு மாறாக அடுத்த வருடத்தில் ஐசிசி உலகக் கோப்பை தொடர் 15 அணிகளை வைத்து நடத்தப் போகிறது. இந்த டி20 தொடர் இந்தியாவில் நடக்கப்போகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஐசிசி இந்த வருடம் இருந்தே செய்யத் துவங்கிவிட்டது. மொத்தம் 15 அணிகள் தேர்வு செய்ய வேண்டும். அதில் ஏழு அணிகள் தரவரிசை பட்டியல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
மீதமுள்ள அணிகளும் தகுதி சுற்று போட்டியில் விளையாடியதன் மூலம் வெற்றி பெற்று மீதி உள்ள இடத்தை பிடிக்க வேண்டும். இதற்காக தற்போது ஐசிசி அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. இந்த அட்டவணையின் படி உலகக்கோப்பை போட்டிகளுக்கு பதினைந்து இடங்களில் இருக்கிறது. இந்த இடங்களுக்காக 13 மாதங்களில் 275 போட்டிகள் நடத்தப்படும்.

மொத்தம் 4 சுற்றுகளாக அணிகள் தேர்வு செய்யப்படும். இந்த நடைமுறை அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதம் முதல் துவங்க போகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக முதன்முறையாக ஹங்கேரி ருமேனியா செர்பியா ஆகிய போட்டிகள் தகுதிச் சுற்றில் விளையாட போகின்றன. அதேபோல் முதன்முதலாக ஐசிசி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பின்லாந்து நாடு வரப்போகிறது.
மேலும் முதல் முறையாக ஐசிசி தகுதி சுற்று போட்டி ஒன்றை ஜப்பான் முதன்முறையாக நடத்தப் போகிறது. மேலும் தகுதி சுற்று போட்டிகள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசியா ஐரோப்பா ஆகிய கண்டங்களில் நடைபெறப்போகிறது. இதில் ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசியா ஆகிய மண்டலங்களில் இருந்து தலா ஒரு அணிகள் தகுதி பெறும். அதே வேளையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மண்டலங்களில் இருந்து தலா இரண்டு அணிகளும் ஆசியாவில் இருந்து இரண்டு அணிகளும் தேர்வு செய்யப்படும். மொத்தமாக எட்டு அணிகள் இதன் மூலம் தேர்வு செய்யப்படும்.

இது தவிர இந்தியாவில் 2021ம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் கடைசி 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் ஐசிசி தரவரிசை பட்டியலில் நேரடியாக தகுதி பெற்ற நேபாளம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், ஜிம்பாப்வே ஆகிய நான்கும் சேர்ந்து இடங்களுக்கு தகுதி பெறும். இந்த 8 அணிகளில் இருந்து தேர்வாகும் 6 அணிகளும் உலகக் கோப்பை தொடரை நடத்தும் அந்த நாட்டின் அணிகளும் என மொத்தம் 11 அணிகளும் 2022ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் விளையாடும்.