அடுத்த கேப்டனாக இந்த பையன போடுங்க, கண்டிப்பா செம்மையா பண்ணுவாரு; சோயிப் அக்தர் கருத்து! 1

இந்த இளம் வீரரை அடுத்த கேப்டனாக கொண்டு வந்தால் நிச்சயம் இந்திய அணிக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

மூன்றுவித போட்டிகளில் இருந்தும் தனது கேப்டன் பொறுப்பை விராட் கோலி ராஜினாமா செய்த பிறகு, குறிப்பாக டெஸ்ட் போட்டிகளுக்கு யார் அடுத்த கேப்டனாக வரவேண்டும் என்ற கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன. ரோஹித் சர்மாவிற்கு ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டு விட்டதால் கூடுதலாக டெஸ்ட் கேப்டன் பொறுப்பு கொடுத்தால் வேலைப்பளு அதிகமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அடுத்த கேப்டனாக இந்த பையன போடுங்க, கண்டிப்பா செம்மையா பண்ணுவாரு; சோயிப் அக்தர் கருத்து! 2

கேஎல் ராகுல் தனது கேப்டன் பொறுப்பில் இன்னும் போதிய அனுபவம் பெறவில்லை. 2 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்தாலும், இந்திய அணியில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியை தோல்வியை நோக்கி எடுத்துச் சென்றுவிட்டார். அதேபோல் 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது.

இதன் காரணமாக வேறு ஒருவரை கேப்டனாக உள்ளே கொண்டுவந்து வளர்த்துவிட வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் ஜாம்பவானான சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

அடுத்த கேப்டனாக இந்த பையன போடுங்க, கண்டிப்பா செம்மையா பண்ணுவாரு; சோயிப் அக்தர் கருத்து! 3

“ஒரு பேட்ஸ்மேனை கேப்டனாக கொண்டு வருவதைவிட, வேகப்பந்து வீச்சாளரை கேப்டனாக கொண்டுவந்தால் அணியில் ஆக்ரோஷம் இன்னும் அதிகமாக இருக்கும். உதாரணமாக, இந்திய அணியில் கபில்தேவ் கேப்டன் பொறுப்பில் இருந்தபோது ஆக்ரோஷம் அணியில் நிலவியது என நன்கு அறிவோம். மேலும் பாகிஸ்தான் அணியிலும் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் இம்ரான்கான் ஆகியோரும் தலை சிறந்த கேப்டனாக இருந்துள்ளனர். அவர்களும் வேகப்பந்து வீச்சாளர்கள் தான்.

ஆகையால் இளம் வீரராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமித்தால் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் ஆக்ரோஷம் நிலவும். நிச்சயம் வெற்றியை நோக்கியும் எடுத்துச் செல்வார்கள். பேட்ஸ்மேன்கள் வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல மாட்டார்கள் என கூறவில்லை. ஆனால் அணியில் கூடுதல் ஆக்ரோஷமாகவும் என்பதே எனது கருத்து. மேலும் சமகாலத்தில் சிறந்த பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர் அணிக்கு எத்தகைய பங்கை வகிக்கின்றனர் என பல போட்டிகளில் பார்க்கிறோம். அந்த வகையில் ஜஸ்பிரித் பும்ரா அடுத்த கேப்டனாக வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். அவருக்கு தற்காலிகமாக துணை கேப்டன் பொறுப்பு கொடுத்து இன்னும் பொறுப்புடன் விளையாட வைக்க வேண்டும்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *