பாகிஸ்தான் அணி ஜெயிக்கணும்னு எனக்கு ஆசை, ஓபனாக பேசிய ஆகாஷ் சோப்ரா; காரணம் இதுதான்!! 1

உலகக் கோப்பை தொடருக்கான போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையிலான உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி அபார சாதனை படைத்தது.

பாகிஸ்தான் அணி ஜெயிக்கணும்னு எனக்கு ஆசை, ஓபனாக பேசிய ஆகாஷ் சோப்ரா; காரணம் இதுதான்!! 2

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வேலையே வைக்காமல் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வெற்றி குறித்தும் இந்திய அணியின் தோல்வி குறித்தும் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்பொழுது பேசுபொருளாக உள்ளது. மேலும் ஒவ்வொரு கிரிக்கெட் ஆர்வலர்களும் தங்களது அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று தங்களது அணிக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

பாகிஸ்தான் அணி ஜெயிக்கணும்னு எனக்கு ஆசை, ஓபனாக பேசிய ஆகாஷ் சோப்ரா; காரணம் இதுதான்!! 3

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணிக்கு உதவ முடியும், அப்படி செய்தால் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முன்னேறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது ஒருவேளை அதற்கு நேர்மாறாக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி விட்டால் மூன்று அணிகள் மிகப் பெரும் போட்டியாக அது அமைந்துவிடும், அப்படி பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி விட்டால் அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான் அணி எளிதாக சென்றுவிடலாம் என்று பேசினார்.

மேலும் பாகிஸ்தான் அணிக்கு துபாய் மைதானம் மிகவும் ஒத்துழைக்கிறது இதன் காரணமாக நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எளிதாக வீழ்த்தி விடும் என்று எண்ணுவதாக ஆகாஷ் சோப்ரா பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *