சிறிது நாட்களாக ஒருநாள் போட்டியில் இந்திய அணி பட்டையை கிளப்பி வருகிறது. உலகில் உள்ள பல பெரிய அணிகளை வீழ்த்தி இந்திய அணி கலக்கி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி 2017- இல் காலை வைத்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பயிற்சி போட்டிகளில் நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளை வீழ்த்தி, இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு இருந்தது.
2017 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணி, இலங்கை அணியுடன் தோல்வியை சந்தித்தது. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில், இந்திய அணி அசால்ட்டாக வென்றது இந்திய அணி. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணிக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்.
தெறி பார்மில் இருக்கும் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்றது. இந்த போட்டி முடிந்ததும், 7வது, 8வது, 9வது இடத்தில் இருக்கும் இடத்தில் இருக்கும் அணிகளுடன் தான் இந்திய அணி தோல்வி பெற்றுருக்கிறது என முன்னாள் இந்திய அணியின் டெஸ்ட் தொடக்கவீரர் மற்றும் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறியிருந்தார்.
இந்த ட்வீட்டை கண்ட ஒரு பாகிஸ்தான் ரசிகர், ‘இந்தியாவில் மட்டும் தான் நீங்கள் சிங்கம்’ என இந்திய அணியை கலைத்தார் பாகிஸ்தான் ரசிகர். இதை ஆகாஷ் சோப்ரா கண்டவுடன், கோபத்தை அடக்காமல் அந்த பாகிஸ்தான் ரசிகரிடம், நீங்க உங்க நாட்டுலயே விளையாட முடியாம இருக்கீங்க,” என பதிலளித்தார்.