ஹர்சல் பட்டேல், மேக்ஸ்வெல்லுக்கு வாய்ப்பு இல்லை... பெங்களூர் அணிக்கு இந்த நான்கு வீரர்கள் போதும்; முன்னாள் வீரர் ஆலோசனை !! 1

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான பெங்களூர் அணியில் தக்க வைக்கப்பட வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து அணிகளும் எந்த வீரரை தக்கவைத்து கொள்ளலாம்..?எந்த வீரரை அணியிலிருந்து நீக்கலாம்..? எந்த புதிய வீரர்களை அணியில் இணைக்கலாம்…? என்ற திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்து வருகிறது.

மேலும் வருகிற 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் இணைந்துள்ளதால் இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலமே மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது, ஐபிஎல் தொடருக்கான ஏலம் நெருங்க நெருங்க முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் தங்களது ஆலோசனைகளை ஒவ்வொரு அணிக்கும் வழங்கி வருகின்றனர்.

ஹர்சல் பட்டேல், மேக்ஸ்வெல்லுக்கு வாய்ப்பு இல்லை... பெங்களூர் அணிக்கு இந்த நான்கு வீரர்கள் போதும்; முன்னாள் வீரர் ஆலோசனை !! 2

அதுமட்டுமில்லாமல் எந்த வீரரை தக்க வைத்துக் கொண்டால் பலம் வாய்ந்த அணியாக மாறும் என்றும்,எந்த வீரரை புதிதாக அணியில் இணைக்க வேண்டுமென்ற அறிவுரைகளை எல்லாம் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இந்த நான்கு வீரர்கள் தக்க வைத்துக் கொண்டால் பெங்களூர் அணி மிகப் பெரும் பலம் வாய்ந்த அணியாக மாறும் என்ற தனது கருத்தை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

ஹர்சல் பட்டேல், மேக்ஸ்வெல்லுக்கு வாய்ப்பு இல்லை... பெங்களூர் அணிக்கு இந்த நான்கு வீரர்கள் போதும்; முன்னாள் வீரர் ஆலோசனை !! 3

அதில் பேசிய அவர், என்னைப்பொருத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் எந்த வீரரை தக்க வைக்கலாம் என்று கேட்டால் முதல் இரண்டு வீரர்களாக விராட் கோலி மற்றும் சஹால் ஆகிய வீரர்களை தான் சொல்வேன், அடுத்தபடியாக முகமது சிராஜ்/ஹர்ஷல் படேல் மற்றும் தேவ்தாத் படிகள் ஆகிய இரண்டு வீரர்களையும் தேர்ந்தெடுப்பேன்.

இதில் முகமத் சிராஜை/ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவரில் ஒருவரை தக்கவைத்து கொள்ளலாம் ஏனென்றால் இருவருமே மிகச் சிறந்த முறையில் பந்துவீசி தனது திறமையை நிரூபித்திருக்கிறார்கள். தற்பொழுது உங்கள் அனைவர் மனதிலும் நான் ஏன் கிளன் மேக்ஸ்வெலை தேர்வு செய்யவில்லை என்று கேள்வி எழுந்திருக்கும்,எனக்கு மேக்ஸ்வெல் மீது 100% சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இல்லை,அவர் கடந்த தொடரில் சிறப்பாக விளையாடினார் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது, ஆனால் வருகிற போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்று உறுதியாக சொல்ல முடியாது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *