பும்ராஹ், ஸ்டார்க், மலிங்கா ஆகிய மூன்று வீரர்களில் இவர் தான் பெஸ்ட் ; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

பும்ராஹ், ஸ்டார்க், மலிங்கா ஆகிய மூன்று வீரர்களில் இவர் தான் பெஸ்ட் ; முன்னாள் வீரர் சொல்கிறார்

சூப்பர் ஓவர்கள் வீசுவதில் ஸ்டார்க் பும்ராஹ் மற்றும் மலிங்கா ஆகிய மூன்று வீரர்களில் யார் சிறந்த வீரர் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஓபனாக தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் தாக்கம் காரணமாக உலகமும் வீட்டிலேயே முடங்கி போயுள்ளதை போன்று, சில நாட்டு கிரிக்கெட் வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி போயுள்ளனர்.

பும்ராஹ், ஸ்டார்க், மலிங்கா ஆகிய மூன்று வீரர்களில் இவர் தான் பெஸ்ட் ; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

வீட்டிலேயே முடங்கியுள்ளதால் டைம் பாஸிற்கு சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அக்டிவாக இருக்கும் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ரசிகர்களுடன் உரையாடியும் வருகின்றனர். தங்களது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து உரையாடுவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, தனக்கென ஒரு யூடியூப் சேனலே உருவாக்கி கொண்டு அதன் மூலம் தினமும் பல்வேறு விசயங்கள் குறித்து பேசி வருகிறார்.

சமீபத்தில், ஐ.பி.எல் தொடருக்கான பஞ்சாப் அணியின் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்திருந்த ஆகாஷ் சோப்ரா, சமீபத்தில் பேசிய மற்றொரு வீடியோ ஒன்றில் சூப்பர் ஓவர் வீசுவதில் யார் உலகின் தலைசிறந்த வீரர் என்பது குறித்தான தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பும்ராஹ், ஸ்டார்க், மலிங்கா ஆகிய மூன்று வீரர்களில் இவர் தான் பெஸ்ட் ; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியதாவது;

சூப்பர் ஓவர் வீச சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது என்னை பொறுத்தவரையில் ரசீத் கான் தான் சிறந்த வீரர். அடுத்ததாக் விண்டீஸ் அணியின் சுனில் நரைனும் சூப்பர் ஓவர்களை சிறப்பாக வீசும் தகுதிபடைத்தவர்.

வேகப் பந்துவீச்சாளர்களில் மலிங்கா, பும்ரா மற்றும் மிட்ஜெல் ஸ்டார்க் ஆகியோரை அவர் தேர்வு செய்திருக்கிறார். இதில் பும்ராவை முதல் தேர்வாகவும், அதற்கு அடுத்தபடியாக ஸ்டார்க், அதைத்தொடர்ந்து மலிங்காவை தேர்வு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்டார்க் தரமான யார்க்கர் வீசக்கூடியவர் என்றாலும், வேகம் குறைந்த பந்து மற்றும் பவுன்சர்களை வீசுவதில் சரிப்படமாட்டார் என சோப்ரா குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவை இரண்டையும் யார்க்கருடன் சேர்த்து வீசக்கூடிய திறமையை பும்ரா பெற்றிருப்பதால் அவரே தனது முதல் தேர்வு என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *