3 இந்திய வீரர்களுக்கு இடம், 2022 டி.20 தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை பட்டியலிட்ட முன்னாள் வீரர்..
2022 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட டி20 தொடருக்கான ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு நிறைவு பெற்றுவிட்டதால், 2022 இல் நடைபெற்ற சுவாரசியமான கிரிக்கெட் சம்பவங்கள் குறித்து அதிகமான தகவல்கள் கிரிக்கெட் வட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் 2022 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய வீரர்களை உள்ளடக்கிய தங்களுடைய ஆடும் லெவனை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா 2022 டி.20 தொடருக்கான தன்னுடைய சிறந்த ஆடும் லெவனை தெரிவித்துள்ளார்.
அதில், “இங்கிலாந்து அணிக்கு 2022 டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரை தனது அணியின் கேப்டனகவும் துவக்க வீரராகவும் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் அவருக்கு துவக்க ஜோடியாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர துவக்க வீரர் முகமது ரிஸ்வானை ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுத்துள்ளார்.
மேலும் மூன்றாவது பேட்டிங் ஆர்டராக, 2022-ஆம் ஆண்டு டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்து டி20 தொடருக்கான நம்பர்-1 பேட்ஸ்மேனாக திகழும் சூரியகுமாரை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் நான்காவது பேட்டிங் ஆர்டரில் உலக கோப்பை தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் கிளன் பில்லிப்ஸும், ஐந்தாவது இடத்தில் தென்னாபிரிக்கா அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லரையும் தேர்ந்தெடுத்துள்ளார்.
மேலும் இவர்களைத் தொடர்ந்து தனது அணியின் ஆல்ரவுண்டர்களாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராஜா மற்றும் இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வணிந்து ஹசரங்காவை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் கடைசியாக உலகக்கோப்பை தொடரில் மேன் ஆஃப் தி மேட்ச் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாம் கரணையும் ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுத்துள்ளார்.
மேலும் இவர்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுபையும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரையும் தனது அணியின் பந்துவீச்சாளர்களாக ஆகாஷ்சோப்ரா தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகாஷ் சோப்ராவின் 2022ஆம் ஆண்டின் தலைசிறந்த டி.20 தொடருக்கான ஆடும் லெவன்..
ஜோஸ் பட்லர்(c),முகமது ரிஸ்வான், சூரியகுமார் யாதவ், கிளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ஹர்திக் பாண்டியா, சிக்கந்தர் ராஜா, வனிந்து ஹசரங்கா,சாம் கரன், ஹாரிஸ் ரவுப், புவனேஷ்வர் குமார்,