சிறந்த 4 வீரர்கள் பட்டியல் – வெளியிட்ட முன்னாள் இந்திய வீரர்! ரோகித், கோஹ்லி இடம் இல்லை?
இந்த காலகட்டத்தில் தலைசிறந்த 4 வீரர்களுக்கான இடத்தில் யார்? யார்? இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
தற்போது ஆடிவரும் வீரர்கள் மத்தியில் பேட்டிங் அடிப்படையில் தலைசிறந்த 4 வீரர்கள் இவர்கள் தான் என பல கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலர் பட்டியலிட்டு வந்துள்ளனர். இதை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக விராட் கோஹ்லி, ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய நால்வரும் சிறந்த 4 வீரர்கள் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த பட்டியலில் புதிய மாற்றத்துடன் 4 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. அவர் வெளியிட்ட பட்டியலில் புதிதாக ரோகித் மற்றும் பாபர் அசாம் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேநேரம் ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, பாக்., அணியில் இளம் வீரர் பாபர் அசாம் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்திலும், ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 2ஆம் இடத்திலும், டெஸ்ட் தரவரிசையில் 5ஆம் இடத்திலும் இருக்கிறார்.
இப்படி அனைத்திலும் டாப் 5 இடத்திற்குள் இருக்கும் ஒருவரை எப்படி சிறந்த நால்வர் இடத்தில் இருந்து புறக்கணிப்பது என கேள்வியெழுப்பியுள்ளார்.
அதேபோல, இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அதிக ரன்களை குவித்து வருகிறார். டி20 போட்டிகளில் தலைசிறந்த வீரராக இருக்கிறார். டெஸ்ட் அரங்கில் துவக்க வீரராக களமிறங்கி 2 சதங்களையும் விளாசியுள்ளார். ஆதலால் இவரையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட பட்டியலில், சிறந்த நால்வர்:
விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ரோகித் சர்மா, பாபர் அசாம்.
வீடியோ: