இது தாண்டா உண்மையான ஜோ ரூட்... சாதனை நாயகன் ஜோ ரூட்டை பாராட்டி பேசிய ஏ.பி டிவில்லியர்ஸ் !! 1
இது தாண்டா உண்மையான ஜோ ரூட்… சாதனை நாயகன் ஜோ ரூட்டை பாராட்டி பேசிய ஏ.பி டிவில்லியர்ஸ்

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து பல சாதனைகள் படைத்த ஜோ ரூட்டை, முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இது தாண்டா உண்மையான ஜோ ரூட்... சாதனை நாயகன் ஜோ ரூட்டை பாராட்டி பேசிய ஏ.பி டிவில்லியர்ஸ் !! 2

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 2 போட்டியில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் இன்று (23-2-24) துவங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இது தாண்டா உண்மையான ஜோ ரூட்... சாதனை நாயகன் ஜோ ரூட்டை பாராட்டி பேசிய ஏ.பி டிவில்லியர்ஸ் !! 3

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, கிராவ்லே (42), டக்கட் (11), ஓலி போப் (0), பாரிஸ்டோ (38), பென் ஸ்டோக்ஸ் (3) உள்ளிட்ட வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து களமிறங்கியதன் மூலம், இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு தனது 5 விக்கெட்டுகளை இழந்தது.

கடந்த போட்டியை போலவே இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் விரைவாக முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது, சமகால கிரிக்கெட் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட், தான் யார் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையிலான மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமும் அடித்து அசத்தினார். இதன் மூலம் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இங்கிலாந்து அணி 302 ரன்கள் எடுத்துள்ளது.

இது தாண்டா உண்மையான ஜோ ரூட்... சாதனை நாயகன் ஜோ ரூட்டை பாராட்டி பேசிய ஏ.பி டிவில்லியர்ஸ் !! 4

கடந்த போட்டிகளில் மற்ற வீரர்களை போன்று அதிரடியாக விளையாட நினைத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம் கடும் விமர்ச்சனங்களையும் எதிர்கொண்ட ஜோ ரூட், ராஞ்சி டெஸ்ட் போட்டியில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமும் அடித்து அசத்தியதை முன்னாள் வீரர்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.


அந்தவகையில், முன்னாள் தென் ஆப்ரிக்கா வீரரான டிவில்லியர்ஸும், தன் பங்கிற்கு ஜோ ரூட்டை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து டிவில்லியர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதவில், “டெஸ்ட் போட்டிகளை வெற்றிகரமாக முடித்து கொடுக்கும் உண்மையான ஜோ ரூட் இவர் தான், மற்ற வீரர்கள் பேஸ்பால் ஆட்டம் விளையாடட்டும். இங்கிலாந்து அணி மிக சிறப்பாக விளையாடி வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *