டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறிது நாள் ஓய்வு எடுத்ததில் இருந்து தென் ஆப்ரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் பற்றி கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. 2016-இல் முதுகு வலி காரணத்தால் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் தற்காலிக ஒரு வருட ஓய்வில் இருக்கிறார் டி வில்லியர்ஸ்.
உடல்நலம் சரி ஆகி மறுபடியும் டெஸ்ட் போட்டி விளையாடுவார் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால், குடும்படத்தும் அதிக நேரம் செலவழிக்க, 2019 உலக கோப்பைக்காக ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து நிரந்தர ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வந்துள்ளது.
அவர் தென்னாபிரிக்கா அணிக்காக தொடர்ந்து விளையாடி கொண்டிருந்தாலும், அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலத்தை பற்றி கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எப்போது திரும்பி வருவார் என்று ஏபி டி வில்லியர்ஸ் இதுவரை சொல்லவில்லை. அவர் மீண்டும் எப்போது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவார் எனவும் கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி முடிந்த பிறகு, அவரது டெஸ்ட் எதிர்காலத்தை பற்றி தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியத்துடன் சில மாதங்களில் பேசுவார் என டி வில்லியர்ஸ் கூறியிருந்தார்.
“ஒரு நல்ல தேதியை முடிவு செய்து, என் எதிர்காலத்தை பற்றி தென்னாப்ரிக்கா கிரிக்கெட் வாரியதுடன் கலந்து பேச உள்ளோம். எந்த போட்டி என்று முடிகெடுக்க போவதில்லை, அடுத்த சில வருடங்களுக்கு என்ன நடக்க போகிறது என கடைசி முடிவை எடுக்க உள்ளோம்,” என தென்னாபிரிக்காவின் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் கூறினார்.
செப்டம்பர் மாதம் பதவி ஏற்கும் தென்னாபிரிக்கா அணியின் புதிய பயிற்சியாளர், டி வில்லியர்ஸின் முடிவை பற்றி பேச வாய்ப்பு உள்ளது.
தனது தற்போதைய ஒப்பந்தம் முடிந்ததும் பயிற்சியாளராக தொடருவாரா என தற்போதைய பயிற்சியாளர் ரசல் டோமிங்கோ உறுதி செய்ய வில்லை.
தென்னாபிரிக்கா அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் முடிவடைந்தது. 5 விண்ணப்பதாரர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு தற்போதைய பயிற்சியாளர் வெளியேறுவர் என தெரிகிறது. அதற்கு பிறகு புது பயிற்சியாளரை தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும்.