மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வருகிறார் டி வில்லியர்ஸ்

வங்கதேசத்துக்கு எதிராக தென்னாபிரிக்கா அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது, இதற்கான தென்னாபிரிக்கா அணியை அறிவித்தார்கள். முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்ரிக்காவுக்காக டி20 அணியில் அறிமுகம் ஆகிய டேன் பேட்டர்சன், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

“இந்த வருடத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசினார், முக்கியமாக கடைசி நேரங்களில். இதே போல் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கிறோம்,” என தென்னாபிரிக்கா அணியின் தேர்வாளர் கூறினார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர் ஜேபி டுமினி, வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால், முக்கியமான செய்தி என்னவென்றால் மீண்டும் அணியில் இணைந்தார் அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் டி வில்லியர்ஸ் தலைமையிலான தென்னாபிரிக்கா அணி தோற்ற பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகினார் டி வில்லியர்ஸ். அதன் பிறகு கேப்டன் பதவியில் உட்கார்ந்தார் டு பிளெஸ்ஸிஸ்.

“டி வில்லியர்ஸ் விலகியதால் இனி கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ் செயல் படுவார். 2019 உலகக்கோப்பைக்கு இந்த தொடரில் இருந்து தான் தயாராகப்போகிறோம்,” என தேர்வாளர் தெரிவித்தார்.

காயம் காரணமாக மோர்னே மோர்கெல் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.

தென்னாபிரிக்கா அணி:

டு பிளெஸ்ஸிஸ் (கே), டி வில்லியர்ஸ், ஹசிம் ஆம்லா, தெம்பா பாவுமா, பார்ஹான் பெஹார்டீன், குயின்டன் டி காக், ஜேபி டுமினி, இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், வெய்ன் பார்னல், டேன் பேட்டர்சன், ஆண்டிலே பெலூக்வாயோ, வெய்ன் பிரிடோரிஸ், காகிஸோ ரபாடா.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.