இதுவரை கோப்பையை வென்றிராத பெங்களூரு அணி இம்முறையானது கோப்பையை வெல்லுமா? என ரசிகர்களின் ஏக்கத்துடன் துவங்கிய பெங்களூரு அணிக்கு இதுவரை கண்டிராத மோசமான தொடராக அமைந்துள்ளது. அதாவது, ஆடிய 6 போட்டிகளில் அனைத்தையும் தோற்று, ஏமாற்றியது. இதற்கிடையில், கோஹ்லி மைதானத்திலேயே கட்டுப்படுத்தமுடியாமல் அழுதுவிட்டார்.
ஒரு போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்புகிறார்கள், மற்றொரு போட்டியில் பந்துவீச்சாளர்கள் சொதப்பல் தான். அணியின் ஃபீல்ட்டிங் மிக மோசமாக விமர்சிக்க கூடிய ஒன்று. ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது 2 அல்லது 3 கேட்சுகளை இதுவரை விட்டிருப்பர். இதனை பார்த்து கடுப்பான கேப்டன் கோஹ்லி, ஒருகட்டத்தில் சிரிக்க துவங்கி விட்டார்.

மேலும், வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், சிராஜ், நவதீப் சைனி மற்றும் அண்மையில் அணியில் இணைந்த ஸ்டாயினீஸ் அனைவரின் பந்துவீச்சு யுக்தி மற்றும் துல்லியம் கேள்விக்குரிய ஒன்றாகியுள்ளது. சுழற்பந்துவீச்சில் யூசுவேந்திர சஹால் சற்று ஆறுதல் தரும் விதமாக இருக்கிறார். உண்மையில், இவர் ஒருவரே இதுவரை அணிக்கு பந்துவீச்சு தூணாக உள்ளார்.
முதல் மூன்று போட்டிகளை கேப்டன் கோஹ்லி, கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்துள்ளார். ஆனால், ஒரு குழுவாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மற்றுமொரு வீரர் டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக ஆடாமல், ஒரு போட்டிகளில் அரைசதமும் மற்றொரு போட்டியில் ஒற்றை இழக்க ரங்களிலும் வெளியேறி ஏமாற்றுகிறார்.’

இந்த தொடர் தோல்வி குறித்து தற்போது காரணங்களை விவரித்துள்ளார் ஏபி டி வில்லியர்ஸ். அவர் கூறியதாவது,”நீங்கள் பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளர் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், அனைவரும் ஃபீல்டர்ஸ். அந்த ஃபீல்ட்டிங் தான் குறைவான ரன்கள் எடுத்திருந்தாலும், 200+ ரன்கள் எடுத்திருந்தாலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். துரதிஷ்டவசமாக, நாங்கள் அங்கு தான் எங்களது வெற்றியை இழக்கிறோம்” என்றார் மிஸ்டர் 360.