ஏபி டி வில்லியர்ஸ் பின்னால் வரிசை கட்டும் பிக் பாஷ் லீக் அணிகள்!! யாருக்கு ஓகே சொன்னார் தெரியுமா?? 1

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் போட்டிகளில் ஆட தென் ஆப்பிரிக்க அணியின் லெஜென்ட் ஏபி டி வில்லியர்ஸ் ஆர்வம் தெரிவித்துள்ளார். இவர் 2019-20 ஆம் ஆண்டுக்கான சீசனில் ஆடுவார் என தெரிகிறது.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஏபிடி வில்லியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். அதேநேரம், உள்ளூர் டி20 தொடர்களில் ஆடுவார் என்பதையும் குறிப்பிட்டார்.

ஏபி டி வில்லியர்ஸ் பின்னால் வரிசை கட்டும் பிக் பாஷ் லீக் அணிகள்!! யாருக்கு ஓகே சொன்னார் தெரியுமா?? 2

பாகிஸ்தான் பிரீமியர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக், இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் துபாய் டி10 தொடர் ஆகிவற்றில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார் ஏபி டி வில்லியர்ஸ்.

35 வயதான டி வில்லியர்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஆடிய 7 போட்டிகளில் 4 அரை சதங்கள் அடித்துள்ளார். பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் கடைசியில் இருந்தாலும் ஏபி டி வில்லியர்ஸ் அணிக்காக நன்கு ஆடி வருகிறார்.

ஏபி டி வில்லியர்ஸ் பின்னால் வரிசை கட்டும் பிக் பாஷ் லீக் அணிகள்!! யாருக்கு ஓகே சொன்னார் தெரியுமா?? 3

ஐபிஎல் தொடரில் 190 சிக்ஸர்களுக்கு மெல் சிக்ஸர்களுக்கு மேல் அடித்த வீரர்களில் கிறிஸ் கெயில் க்கு அடுத்தபடியாக டி வில்லியர்ஸ் உள்ளார். இவர் 40க்கும் மேல் சராசரியை கொண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே பிக் பாஷ் லீக் போட்டிகளில் ஆடி வரும் அணிகள் டிவில்லியர்ஸ் ஐ தங்களது அணிகளுக்கு ஆடுவதற்காக தொடர்ந்து வற்புறுத்தியும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து மறுத்து வந்தார் டி வில்லியர்ஸ். இந்நிலையில், அடுத்த சீசனில் ஆடுவதற்கு தற்போது விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால், அணிகள் இவரை எடுப்பதற்காக வரிசை கட்டி நிற்கின்றன.

ஏபி டி வில்லியர்ஸ் பின்னால் வரிசை கட்டும் பிக் பாஷ் லீக் அணிகள்!! யாருக்கு ஓகே சொன்னார் தெரியுமா?? 4

கடந்த ஆண்டு பிக் பாஸ் லீக் போட்டிகளில் டிவில்லியர்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து கடந்த ஆண்டு மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கிளென் மாக்ஸ்வெல் கூறியதாவது, “டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் எங்களது அணியில் இடம்பெறுவது எங்களுக்கு பெருமை. அவர் தனது ஆட்டத்தால் மக்களை மகிழ்விப்பார்” என்றார். ஆனால், துரதிஷ்டவசமாக அவரால் ஆடமுடியவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *