இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோணா! ரசிகர்கள் கவலை! அடுத்த தொடரில் ஆட வேண்டாம் என தடை விதித்த கிரிக்கெட் வாரிய!ம் 1

இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோணா! ரசிகர்கள் கவலை! அடுத்த தொடரில் ஆட வேண்டாம் என தடை விதித்த கிரிக்கெட் வாரிய!ம்

மேற்கு வங்க கிரிக்கெட் அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.. இதனை மேற்கு வங்க கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.

உலகம் முழுவதும் தற்போது வரை கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் தங்களது இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டனர். பெரும்பாலும் முகக்கவசம் அணிவதில்லை. இப்படி இருக்கையில் உலகம் முழுவதும் நடைபெறும் கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது

Abhimanyu Easwaran: Want to lead like Sourav Ganguly, says new Bengal  captain Abhimanyu Easwaran | Cricket News - Times of India

மேலும் சமீபத்தில் இப்படித்தான் ஐபிஎல் தொடரும் இப்படித்தான் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. அப்படியிருந்தும் தொடரின் தொடக்கத்தில் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவின் உள்ளூர் போட்டிகளை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்த பேச்சுக்கள் வந்துகொண்டிருக்கிறது. பிசிசிஐ இது குறித்து எதனையும் தற்போதுவரை பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் மேற்கு வங்க கிரிக்கெட் அணியின் கேப்டனான அபிமன்யு ஈஸ்வரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். மேற்குவங்க மாநிலத்தில் தமிழகத்தில் நடைபெறுவதைப் போல அந்த மாநிலத்திற்கு என டி20 தொடர் நவம்பர் 24ஆம் தேதி துவங்குகிறது. இப்போது அந்த மாநிலத்தின் உள்ளூர் போட்டிகளில் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருப்பதால் இந்த தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகமாக இருக்கிறது.

Bengal Ranji skipper Abhimanyu Easwaran tests positive for COVID-19 |  Cricket News – India TV

இது குறித்து மேற்கு வங்க கிரிக்கெட் வாரிய இணைச்செயலாளர் பேசுகையில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. எனினும் அவருக்கு அறிகுறிகள் பெரிதாக ஏதுமில்லை இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார் மேற்கு வங்க மருத்துவச் சிகிச்சையின் கீழ் இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் அந்த அதிகாரி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *