முகுந்த் மற்றும் நாயர் இலங்கை தொடரில் இருந்து விலகவில்லை – பிரசாத்

கதை என்ன?

ஜூலை 26 அன்று இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது அதே நாளில் தான் முத்தரப்பு தொடரில் இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A போட்டி தொடங்குகிறது. இதனால், இந்திய அணியில் அபினவ் முகுந்த் மற்றும் கருண் நாயர் ஆகியோர் விளையாடமாட்டார் என அனைவரும் நினைக்க, புது ஐடியாவோடு ஒருவர் வந்திருக்கிறார். அடுத்து வரும் டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாட வாய்ப்பு இருக்கிறது என இந்திய அணியின் தேர்வாளர் பிரசாத் கூறியுள்ளார்.

விவரங்கள்:

அடுத்த மாதம் தென்னாப்ரிக்காவுக்கு ஜூனியர் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த சுற்றுபணத்துக்கான இந்திய அணியில் அபினவ் முகுந்த் மற்றும் கருண் நாயர் ஆகியோரின் பெயர்களும் உள்ளது. அதே நேரத்தில் தான் இந்திய அணியும் இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடர் விளையாடவுள்ளது. இதனால், இலங்கைக்கு எதிரான தொடரில் அபினவ் முகுந்த் மற்றும் கருண் நாயர் ஆகியோர் விளையாடமாட்டார்கள் என தகவல்கள் வந்துள்ளது.

இரண்டு நான்கு-நாள் போட்டிகளுக்கு அபினவ் முகுந்த் பெயரும், மீதம் இருக்கும் போட்டிகள் கருண் நாயர் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

அடுத்தது என்ன?

ஜூலை 26 அன்று இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது அதே நாளில் தான் முத்தரப்பு தொடரில் இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A போட்டி தொடங்குகிறது. இதனால், இந்திய அணியில் அபினவ் முகுந்த் மற்றும் கருண் நாயர் ஆகியோர் விளையாடமாட்டார் என அனைவரும் நினைக்க, புது ஐடியாவோடு ஒருவர் வந்திருக்கிறார். அடுத்து வரும் டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாட வாய்ப்பு இருக்கிறது என இந்திய அணியின் தேர்வாளர் பிரசாத் கூறியுள்ளார்.

“அபினவ் முகுந்த் மற்றும் கருண் நாயர் ஆகியோர் ஜூனியர் இந்திய அணியில் இருக்கிறார்கள். அதனால், அவர்கள் இலங்கை தொடரில் இருந்து விலகிவிட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. ஜூலை 11ஆம் தேதி அணியை தேர்ந்தெடுப்போம். இருவரில் யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்தால், ஜூனியர் இந்திய அணியில் அவருக்கு பதிலாக யாராவது ஒருவரை சேர்ப்பார்கள்,” என பிரசாத் கூறினார்.

முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுலின் உடல்நலத்தை பற்றி எதிர்பார்க்கிறார் பிரசாத். ஏப்ரலில் நடந்த டெஸ்ட் தொடரின் போது இருவருக்கும் காயம் ஏற்பட்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கூட விளையாடவில்லை. அவர்களின் உடல்நலம் சரியாகி இலங்கை தொடருக்கு வருவார்கள் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

அவர்களால் முடிந்த வரை கிரிக்கெட் விளையாட அவர்களுக்கு உரிமை உள்ளது என பிரசாத் ஒப்புக்கொண்டார்.

“தன்னால் முடிந்த வரை நீண்ட காலமாக விளையாட அனைத்து வீரர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால், அது அனைத்தும் தேர்வாளர்கள் கையில் தான் உள்ளது. அணிக்கு எது நல்லது என்று அவர்கள் தான் முடிவெடுப்பார்கள்,” என பிரசாத் மேலும் கூறினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.