இந்திய அணியின் துவக்க வீரராக இருந்த அபினவ் முகுந்த், சரிவர செயல்படாததால் அணியில் நீடிக்கவில்லை. அதன்பிறகு, தமிழக அணிக்கு இடைவிடாது பங்களிப்பை அளித்து வந்துள்ளார். அவருக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது. மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் சக தமிழக கிரிக்கெட் சார்ந்த நண்பர்களும் கலந்துகொண்டனர்.
இந்திய வீரரான சென்னை வாழ் தினேஷ் கார்த்திக் அபினவ் முகுந்தின் நீண்டகால நண்பர். அவர் முகுந்த் திருமண விழாவில் கலந்துகொண்டு அதன் புகைப்படங்களை தனது அதிகாரபூர்வ டிவிட்டரில் பதிவு செய்தார். இல்லையெனில், இதுபற்றி பெரிதும் தெரிந்திருக்காது.
முகுந்தின் சர்வதேச வாழ்க்கை துவங்கியது முதல் சரிவர அமையவில்லை. 2011 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் தொடரை சந்தித்த இடது கை பேட்ஸ்மேன், இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் அறிமுகமான ஆறு ஆண்டுகள் கழித்து, அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2017 ல் டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டார், ஆனால் அவரது தேர்வு நியாயப்படுத்த தவறிவிட்டார். பார்டர்-கவாஸ்கர் தொடரில் தோல்வி அடைந்தபின், அவர் இலங்கைத் தொடருக்கு அதிர்ஷ்டவசமாக இடம்பிடிதிறுந்தார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது மோசமான செயல்திறன் தொடர்ந்தது.
அவர் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 12 ரன்கள் எடுப்பதற்கு முன் இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டக் அவுட் ஆனார். மறுபுறம், டெஸ்ட் அணியில் மறுபிரவேசம் செய்து இருந்த அவரது கூட்டாளி ஷிகார் தவான், ஒரு புத்திசாலித்தனமான சதத்தை அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் முகுந்த் 81 ரன்களை எடுத்தார், ஆனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவருக்கு ஆட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கு அடுத்ததாக பிருதிவி ஷா, மயான்க் அகர்வால், லோகேஷ் ராகுல், ஷிகார் தவான் ஆகிய துவக்க வீரர்கள் அணியில் இடம்பிடிததால், அபினவ் முகுந்த் மற்றொரு முறை அணிக்கு திரும்ப செல்ல சாத்தியமில்லை என்ற சூழலே நிலவுகிறது.
2018-19 பருவத்தின் தொடக்கத்தில் கேப்டன் பதவியில் இருந்து அகற்றப்பட்டபோது, உள்நாட்டு அரங்கில் விஷயங்கள் வீழ்ச்சியுற்றன. ஆனால் அவர் வலுவாக திரும்பினார் மற்றும் கடந்த பருவத்தில் 51 சராசரியாக கொண்டு 622 ரன்கள் அடித்தார். முகுந்த் அவரது வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்தை தொடங்குவதற்கு இது சரியான தருணமாக அமையும். திருமணத்திற்கு பின் அவரின் செயல்களை கவனிப்போம்.
சில புகைப்படங்கள் இதோ:
https://www.instagram.com/p/BurDivYHcLe/?utm_source=ig_embed&ig_mid=XIFcswABAAGNsNVIX2ibqRcybvjE
தினேஷ் கார்த்திக் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் சில புகைப்படங்களை வெளியிட்டார்: