வெக்ககெடான செயல்,ரொம்ப ஓவரா போரிங்கடா; எச்சரித்த கிளென் மேக்ஸ்வெல் !! 1

ஆஸ்திரேலிய அணியின் டி20 கேப்டன் ஆரோன் பின்ச்,சமீபகாலமாக எந்த ஒரு போட்டியிலும் சிறப்பாக செயல்படவில்லை, இதன் காரணமாக அவர் சமூக வலைத்தளங்களில் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறார், இந்நிலையில் அவருடைய குடும்பத்தை அச்சுறுத்தும் வகையிலான பாலியல் ரீதியான மிரட்டல்கள் வருவதாக ஆரோன் பின்சின் மனைவி ஏமி கிரிபித் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்ட நாயகன் மற்றும் துவக்க வீரர் ஆரோன் பின்ச் 2020-2021 நடந்த பிபிஎல் போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. இவர் 13 போட்டிகளில் பங்கேற்று வெறும் 179 ரன்கள் மட்டுமே எடுத்தார், இவருடைய ஸ்டிரைக் ரேட் 113.29.அதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 5 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

வெக்ககெடான செயல்,ரொம்ப ஓவரா போரிங்கடா; எச்சரித்த கிளென் மேக்ஸ்வெல் !! 2

இதில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2-0 என முன்னிலையில் உள்ளது, இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆரோன் பின்ச் 1 மற்றும் 12 ரங்களில் தனது விக்கெட்டை இழந்தார்.மேலும் இவர் இப்படியே விளையாடினால் இவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்தாகிவிடும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியோடு பெங்களூர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆரோன் பின்ச் 2021 கானா ஐபிஎல் போட்டியில் எந்த ஒரு அணியும் தேர்ந்தெடுக்காதது குறிப்பிடத்தக்கது.

வெக்ககெடான செயல்,ரொம்ப ஓவரா போரிங்கடா; எச்சரித்த கிளென் மேக்ஸ்வெல் !! 3

இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஆரோன் பின்சின் மனைவி ஏமி கூறியதாவது, மிகச்சிறந்த அதிரடி வீரரான ஆரோன் பின்ச், தான் சிறப்பாக விளையாண்ட காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக பலமுறை வெற்றியைத் தேடிக் கொடுத்தார், இருந்தபோதும் மக்கள் தற்பொழுது யாரும் இவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை, மேலும் அவர்கள் செய்யும் அனாகரிகமான காரியங்களுக்கு என்னால் வெறுக்காமல் இருக்க முடியாது என் வாழ்க்கையில் இது போன்ற மோசமான சம்பவம் நடைபெற்றது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் இதுபற்றி கூறியதாவது, இதுபோன்ற வெறுக்கத்தக்க செயல்களை செய்வதில் இருந்து மக்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இவ்வாறு செய்தது மிக்க வெறுக்க கூடிய செயலாகும். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையையும் அவருடைய குடும்பத்தையும் தேவையில்லாமல் இணைத்துப் பேச வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *